'போட்டாரு பாருயா ஆர்டர்'... 'மகாராஷ்டிர அரசின் அதிரடி அறிவிப்பு'... பாராட்டிய தள்ளிய தமிழக நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய உத்தரவு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குத் தமிழக நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிர அரசின் சார்பில் அனைத்து துறைத் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பணியில் இருக்கும்போது வேண்டுமென்றே மராத்தி மொழியைப் பயன்படுத்தாத ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விரிவாக அந்த சுற்றறிக்கையில் அனுப்பப்பட்டுள்ள தகவலில், ''பல துறைகள் இன்னும் ஆங்கில மொழியில் சுற்றறிக்கை, அரசாங்க தீர்மானங்கள் போன்றவற்றை வெளியிடுகின்றன. அதேபோன்று பல துறைகளின் வலைத்தளங்களும் ஆங்கிலத்தில் உள்ளது. இதேபோல், பல நகராட்சி நிறுவனங்கள், அறிவிப்புகள், கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் மாதிரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மராத்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். அதோடு முக்கியமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் வேண்டுமென்றே மராத்தி மொழியைப் பயன்படுத்தாமல் இருந்தால் ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது, என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரியில் நடந்த மாநில பட்ஜெட் கூட்டத்தில் , பள்ளிகளில் மராத்தி மொழியைக் கட்டாய பாடமாக மாற்றும் சட்டத்தை மாநில அரசாங்கம் நிறைவேற்றியது. மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கு 2020 - 2021 ஆம் கல்வியாண்டிலிருந்து மராத்திய மொழி கட்டாய பாடமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனிடையே மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்புக்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். தாய் மொழி என்பது ஒரு அடையாளம் அது நிச்சயம் காக்கப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீண்ட' போராட்டத்துக்கு பின்... மகாராஷ்டிராவுக்கு கிடைத்த 'தித்திப்பு'... இனிமே நல்ல காலம் தான்!
- 'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்!
- 'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை!
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- இவ 'கொடுமை' தாங்காம புருஷன் இறந்துட்டாரு... இப்போ என்னையும் 'வீட்டுல' அடைச்சு வச்சு... கோர்ட் கதவை தட்டிய 70 வயசு பாட்டி!
- 'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'
- '2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...
- ‘கையில காசு இல்ல’!.. ‘பசி’.. பெற்ற தாயை வீட்டைவிட்டு துரத்திய ‘மகன்’.. ஊரடங்கில் நடந்த சோகம்..!