‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிக கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 48,000 பேரும், நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 50,000 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், மகாராஷ்டிர மாநிலம் முழுதும் கடுமையான பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக், ‘இரவு நேர முழு முடக்கம் உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே உணவகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அலுவலகங்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும்’ என தெரிவித்தார்.
இரவு நேர ஊரடங்கு தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
1. இன்று (05.04.2021) முதல் இரவு 8 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்.
2. வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்.
3. பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை.
4. மால்கள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்.
5. ஹோம் டெலிவரி மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
6. கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
7. காய்கறி சந்தை / கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க விதிகள் அறிவிக்கப்படும்.
8. திரைப்படப் படப்பிடிப்பில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
9. திரையரங்குகள் மூடப்படும்.
10. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து பிற நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடை.
11. தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து 50 சதவீத அளவுடன் இயங்கும்.
12. போக்குவரத்துக்கு தடை ஏதும் இல்லை.
13. அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
14. காரணம் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
15. இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள் மூடப்படும்.
16. செய்தி பேப்பர் போடுபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
17. முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் மூடப்படும்.
18. பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பை தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை.
மேற்கண்ட கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!
- 'நான் உங்கள பயமுறுத்தல'... 'ஊரடங்கு இல்லைன்னுசொல்ல முடியாது, ஆனா'... உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் ட்விஸ்ட்!
- ‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!
- 'என்கிட்ட அவரு கடைசியா பேசுறப்போ சொன்ன விஷயம் இது...' 'கொரோனாவினால் மறைந்த டாக்டர் சைமன் உடலை...' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
- ‘அந்த லிஸ்ட்ல தமிழ்நாடு இல்ல’!.. ‘யாரும் வீண் வதந்தியை பரப்பாதீங்க’.. சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல்..!
- ‘4 நாளா காய்ச்சல்’.. ‘இப்போ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கு’!.. இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் கேப்டன் ட்வீட்..!
- 'இந்தியாவின் 'ஐடி' தலைநகருக்கு வந்துள்ள சோதனை'... 'அடுத்து என்ன நடக்குமோ'... அச்சத்தில் மக்கள்!
- 'எனக்கும் கொரோனா பாஸிடிவ்னு கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க...' 'சச்சினை தொடர்ந்து அடுத்த வீரர்...' - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்...!
- 'ரைட்டுறா ரைட்டு!.. இப்படியே போச்சுனா இந்த வருஷமும் வெளங்குன மாதிரி தான்'!.. அதிர்ச்சியளிக்கும் இன்றைய கொரோனா ரிப்போர்ட்!