'இப்படி ஒரு கரண்ட் பில் பார்த்தா...' 'யாரா இருந்தாலும் தலை சுத்த தானே செய்யும்...' - ஒரு ஜில்லாக்கு சேர்த்து பில் போட்டாங்கன்னு நெனச்சோம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மின்கட்டணத்தை பார்த்து 80 வயது முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நலசோபாரா என்ற ஊரைச் சேர்ந்தவர் 80 வயதான கன்பத் நாயக். எப்போதும் போல இந்த மாதமும் கன்பத்திற்கு மகாராஷ்ட்டிரா மின் பகிர்மானக் கழகத்ததிலிருந்து மின் கட்டணம் வந்தது. அதைகண்ட கன்பத் நாயக் அதிர்ச்சியில் உறைந்திய போய் கீழே விழுந்துள்ளார். அப்போது தான் அவருக்கு ரூ.80 கோடி என மின் கட்டணம் வந்தது தெரிந்துள்ளது.

மேலும் ஏற்கனவே இதய நோய் கன்பத் நாயக் இந்த மின்கட்டண தொகையை பார்த்து அதிர்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த அவரின் பேரப் பிள்ளைகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தத்தில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய கன்பத் தாத்தாவின்  பேரன் நிகில், எங்கள் தாத்தா அதிர்ச்சியில் கீழே விழுந்த போது எங்களுக்கு 80,000 ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது என தெரிந்தது. இந்தக் மின் கட்டணம் ஒட்டுமொத்த மாவட்டத்துக்கானது என நினைத்தோம். அதன்பின் பொது முடக்க காலத்தில் மின்வாரியம் அரியருடன் மின் கட்டணத்தை வசூலிக்கிறது. இதனால் நாங்களும் பயந்துவிட்டோம்' என்றார்.

மேலும் இது குறித்து விளக்கமளித்த மகாராஷ்ட்டிரா மின் வாரிய அதிகாரி சுரேந்திர மோர்னே '6 எண்கள் குறிப்பிட வேண்டிய இடத்தில் 9 எண்கள் டைப் செய்த கிளரிக்கல் (நிர்வாகம்) தவறால் நிகழ்ந்துவிட்டது. இப்போது சரியான மின்கட்டணம் கன்பத் நாயக் வீட்டுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால் அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்