பயங்கர சத்தமா கேட்ட 'வெடி' சத்தம்...! 'வந்து பார்த்தப்போ எல்லாரும் ஆடி போயிட்டாங்க...' - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.டி.எம். எந்திரத்திற்கு வெடி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை கொள்ளையடிக்க முற்படுவதும், ஒரு சிலர் அதை உடைக்க முயன்று தோற்று போவதும், இன்னும் சிலர் வங்கிக்கணக்கு பரிவர்த்தனை பதிவு செய்யும் இயந்திரத்தை கூட விட்டு வைக்காமல் திருடி வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட், சகான் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டை பாம்பொலியில் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

அந்த ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்த 2 மர்மநபர்கள் தீடீரென யாரும் எதிர்பார்க்காத போது அதிரடியாக ஏ.டி.எம் எந்திரத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளனர். வெடித்து சிதறிய அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து சிதறிய பணத்தை அள்ளி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உடனடியாக காவல்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 ஆசாமிகளின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அதோடு வெடி வைக்கப்பட்ட அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் சுமார் ரூ.28 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு ஏ.டி.எம். எந்திரத்தை வெடிக்க செய்ய டி.என்.டி. டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்