ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘17 பேருடன்’ புறப்பட்ட கார்... ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியபோது நடந்த ‘கோரம்’... ‘சோகத்தில்’ மூழ்கிய கிராமங்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டம் சிஞ்சோல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு நாராயண் சவுத்ரி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் 15 பேருடன் சோப்ரா கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் சிஞ்சோலுக்குத் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

அவர்களுடைய கார் இரவு 11 மணியளவில் ஹிங்கோலா என்ற கிராமம் அருகே போய்க்கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக காரின்மீது மோதியுள்ளது. அப்போது லாரி மோதியதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து போக, அதிலிருந்த பாலு நாராயண் சவுத்ரி, அவருடைய மனைவி உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்திருந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் இரு கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ACCIDENT, MAHARASHTRA, MARRIAGE, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்