'இந்த மாதிரி ஒரு சிறிய போதை அடிமையுடன் போய் என்னை ஒப்பிட்டு..'.. நடிகையை சாடிய கங்கணா.. பரபரப்பு ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்ததோடு மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவையும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சிவசேனா சார்பிலும் கடும் எதிர்ப்பு வந்தது.
ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போல மகாராஷ்டிரா மாறிவிட்டதாக என்று கங்கனா கூறியதால், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து அவர் மும்பை வருவது இன்னும் கடினமானதை அடுத்து மத்திய அரசின் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அவர் மும்பை வந்தடைந்தார். இதனிடையே, கங்கனாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய தினமே இடித்தனர். ஆனால் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டலால் அந்த நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கங்கணா மற்றும் ரியா விவகாரங்களை குறிப்பிட்டு நடிகை சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கண்ணுக்கு கண்தான் தீர்வு என்றால் மொத்த உலகமும் குருடாக வேண்டியதுதான்’ என்று பதிவிட்டிருந்தார்.
சோனம் கபூரின் இந்த கருத்துக்கு கங்கணா தனது ட்விட்டரில், “திடீரெம இந்த மாஃபியா முட்டாள்கள் ரியாவோட சேர்த்து எனக்கும் நீதி வாங்கித்தர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நான் மக்களுக்காக போரிடுகிறேன். என்னுடைய போராட்டங்களை சுயமாக உருவாகி, சூப்பர்ஸ்டாரின் நிழலில் அண்டி வாழும், ஒரு சிறிய போதை அடிமையுடன் ஒப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டின் நிலவும் நெப்போட்டிசத்துக்கு எதிராகவும், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்களுக்கு எதிராகவும் கங்கணா பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: "இன்னைக்கு என்னோட வீட்ட இடிச்சுட்டீங்க... நாளைக்கு உங்க..." - நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்!.. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை!
- Bollywood-ஐ அதிரவைத்த சம்பவம்!.. நடிகை கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு!.. வலுக்கும் மோதல்!.. மும்பையில் பரபரப்பு!
- 'சுஷாந்த் சிங்' வழக்கு: 'ஒரு வழியாக ஆஜரான ரியா!'.. போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு!.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
- மராட்டிய அரசுக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத்... அசைக்க முடியாத பாதுகாப்போடு மும்பை வருகிறார்!.. மத்திய அரசு அதிரடி!.. என்ன நடந்தது?
- "முடிஞ்சா என்னை தடுத்து பாருங்க"!.. மராட்டிய அரசுக்கு 'சவால்' விடுத்த நடிகை 'கங்கனா ரனாவத்'!.. வலுக்கும் மோதல்... செம்ம ஹைலைட் 'இது' தான்!