தமிழக ராணுவ வீரருடன்.. தமிழில் பேசிய அருணாச்சல பிரதேச மருத்துவர்... "அடேங்கப்பா, பக்காவா பேசுறாரே".. இணையத்தை கலக்கும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் தமிழில் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

அருணாச்சல பிரதேச மாநிலம், தவாங் மாவட்டத்தில் உள்ள திபெத் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடம் ஒன்றில், இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப் பிரிவை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரை சந்தித்துள்ளார்.

அந்த மருத்துவர் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், தமிழக ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயம் பற்றிய தகவலை தமிழில் பகிர்ந்து கொண்டனர். எங்கோ ஒரு எல்லையில், தமிழ் பேசும் ராணுவ வீரர் மற்றும் மருத்துவரின் வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்து வந்தது.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு பகிர்ந்துள்ளார். மேலும் தனது கேப்ஷனில், "மருத்துவர் லாம் டோர்ஜி தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றவர். மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர் ஒருவருடன் சரளமாக தமிழில் பேசி அவரை ஆச்சரியப்படுத்தினார். இவர்கள் திபெத் எல்லையில் தவாங் அருகே அமைந்துள்ள ஓம்தாங் என்னும் இடத்தில சந்தித்து கொண்டனர்.

 

உண்மையான தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!. நமது மொழிகளின் பன்முகத் தன்மை குறித்து பெருமை கொள்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர், திபெத் எல்லை அருகே தமிழில் பேசும் வீடியோ, எக்கச்சக்க நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

TAMIL, SOLDIER, ARUNACHAL PRADESH, DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்