அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பசி என்ற பெயரில் அழைப்பு இல்லாத திருமண நிகழ்விற்கு சென்ற MBA மாணவனுக்கு அங்கே இருந்தவர்களால் நேர்ந்த சம்பவம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பொண்ணுக்கு 72, பையனுக்கு 78.. 😍.. கல்யாணம் எங்க வெச்சு நடந்தது தெரியுமா..?.. வைரல் Love ஸ்டோரி!!

மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள் என ஏராளமானோர் சூழ்ந்திருக்க, அந்த நிகழ்வில் கலந்து கொள்ள MBA மாணவன் ஒருவனும் அங்கே வந்துள்ளார்.

ஆனால், அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த மாணவனுக்கு எந்த அழைப்பிதழும் இல்லை என தகவல்கள் கூறுகின்றது.

அப்படி இருக்கையில், பசியின் காரணமாக திருமண வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவருக்கு திருமண அழைப்பே இல்லாமல் அங்கே வந்திருப்பதாகவும் சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். அவரிடம் எப்படி இங்கே வந்தாய் என்பது குறித்து விசாரித்த போது மாணவன் அனைத்து உண்மைகளையும் கூறி உள்ளான்.

அழைப்பே இல்லாமல் கலந்து கொண்டதால், அங்கே இருந்தவர்கள் மாணவனுக்கு மோசமான தண்டனையை கொடுத்துள்ளனர். திருமண வீட்டில் உள்ள பாத்திரங்களை கட்டாயப்படுத்தி கழுவ வைத்த நபர்களிடம் கொஞ்சம் சாப்பிட்டதற்காக நான் இதை செய்ய வேண்டுமா என மாணவன் கேட்க, "இலவசமாக சாப்பிட்டாய் அல்லவா, வீட்டில் கழுவுவது போல சுத்தமாக பாத்திரம் கழுவு" என்றும் அங்கே நின்றவர் கூறி உள்ளார். பின்னர் அந்த மாணவனின் சொந்த ஊர் பற்றியும், படிப்பு பற்றியும் அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, "MBA படிக்கும் உனக்கு வீட்டில் இருந்து சாப்பிட பணம் அனுப்புவதில்லையா?" என்றும் கேட்கின்றனர். திருமண வீட்டில் அழைப்பு இல்லாமல் சாப்பிட்டதன் பெயரில் MBA மாணவனை பாத்திரம் கழுவ விட்ட அவலம், நாடு முழுவதும் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.

பலரும் இந்த செயலை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "எழுந்து வா லட்சுமி" 😭😭.. சமாதியில் கண்ணீர் விட்ட யானை பாகன் சக்திவேல்.. மனதை ரணமாக்கும் சோகம்!!

MADHYA PRADESHA, MBA STUDENT, EAT, FOOD, WEDDING, UNINVITE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்