"என் 2 பொண்டாட்டி'ங்க Election'ல ஜெயிச்சுட்டாங்க.." உச்ச மகிழ்ச்சியில் கணவர்.. "3-வது மனைவியும் இருக்காங்க..."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், ஒரு நபரின் இரண்டு மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயதாகும் சம்ரத் மவுரியா என்பவர், ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அதிகம் வைரலாகி இருந்தது.

அலிராஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நன்பூர் என்னும் பகுதியில் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் சம்ரத் மவுரியா. இவர் அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் நடப்பதற்கு முன்பு வரை, சுமார் 15 ஆண்டுகளாக 3 பெண்களுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்திருந்தார் சம்ரத் மவுரியா. இதன் மூலம், இவருக்கு மொத்தம் 6 குழந்தைகளும் உள்ளனர். வறுமை காரணமாக திருமணம் செய்யாமல் இருந்து வந்த சம்ரத், கடந்த ஏப்ரல் மாதம், மூன்று பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இந்த திருமணம் அந்த கிராமத்தில், சுமார் 3 நாட்கள் மிகவும் விமரிசையாக திருவிழா போல கொண்டாடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது. இந்நிலையில், சம்ரத்தின் மூன்று மனைவிகளில் இரண்டு பேர், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது மூன்றாவது மனைவியையும் தேர்தலில் நிறுத்த சம்ரத் முயன்றதாகவும், ஆனால் அவர் கல்வித் துறையில் Peon ஆக பணிபுரிந்து வருவதால், வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அந்த முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னாள் கிராம தலைவராக இருந்த சம்ரத் மவுரியா, இரண்டு மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றதால், ஆனந்தத்தில் திளைத்து போயுள்ளார்.

இதுகுறித்து பேசும் சம்ரத், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இங்குள்ள மக்கள், என்னையும் எனது மனைவியையும் நேசிக்கிறார்கள். அவர்கள் தங்களின் அன்பினையும் தற்போது பொழிந்துள்ளனர். நான் எனது மூன்று மனைவிகளுடன், ஒரு சிறிய அறையில் மிகவும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன். அதே போல, அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாங்கள் ஒன்றாக தான் கலந்து வருகிறோம்" என சம்ரத் தெரிவித்துள்ளார்.

Also Read | ODI ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ்.. கோலியின் மனம் உருக வைத்த கமெண்ட்..

MADHYA PRADESH, PANCHAYAT POLL, TRIBAL MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்