அடுத்தடுத்து நடந்த 3 பயங்கரம்... குறிப்பா அவங்க மட்டும் தான் டார்கெட்.. மொத்த மாநிலத்தையும் நடுங்க வைக்கும் 'Stone Man'.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 கொலைகளை செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இந்த காலத்து இளைஞர்கள் மனைவினாலே தொல்லைன்னு நினைக்கிறாங்க".. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

வாட்ச்மேன்

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் மக்ரோனியா-பாந்த்ரா சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் உத்தம் ரஜாக் என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். கடந்த மே மாதம் ரஜாக் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கியிருக்கிறார். இதனால் ரஜாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வந்தனர்.

credit : MP police | Twitter

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை சாகரின் கலை மற்றும் வணிகக் கல்லூரியின் வாட்ச்மேன் ஷம்பு ஷரன் துபே (வயது 60) தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரை ஒருவர் கல்லால் தாக்கியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். கல்லூரியின் உணவகத்தின் அருகே அவரது உடல் கிடந்தது. அருகிலேயே சிம் கார்டு இல்லாத போன் ஒன்றும் கிடந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து செல்போன் யாருடையது என்ற கோணத்தில் விசாரணையை துவங்கினர் போலீசார்.

credit : MP police | Twitter

செல்போன்

அப்போது, பைன்சா எனும் பகுதிக்கு அருகில் வாட்ச்மேனாக பணிபுரிந்துவந்த கல்யாண் லோதி என்பவருடைய போன் அது என்பது போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. இதற்குள் லோதியும் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்ட தகவல் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கிறது. இப்படி அடுத்தடுத்து நடைபெற்ற பயங்கர சம்பவங்களால் மாநிலமே அச்சத்தில் இருந்த நேரத்தில் தான் மங்கள் அஹிர்வார் எனும் வாட்ச்மேன் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பித்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Credit: ANI

கொலை செய்யப்பட்ட அனைவரும் வாட்ச்மேன்கள் என்பதும் அனைவருமே 50 - 60 வயதுடையவர்கள் என்பதால், பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கொலையாளியை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிசிடிவியில் பதிவான கொலையாளியின் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டிருக்கின்றனர். இதனால் மத்திய பிரதேச மாநிலமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.

Also Read | 6 வருஷத்துக்கு முன்னாடி தொலைந்துபோன மாற்றுத் திறனாளி சிறுவன்.. ஆதார் கார்டு மூலமாக நடந்த அதிசயம்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

MADHYA PRADESH, POLICE, STONE MAN, WATCHMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்