'பேசி தீர்த்துக்க வேண்டியது தானே...' 'அந்த வீடியோல இருக்குறத அக்செப்ட் பண்ண முடியாது...' - 'ஒரே ஒரு வீடியோ...' உயர் அதிகாரிக்கு வந்த ஆர்டர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் காவல்துறை உயர்பதவியான கூடுதல் தலைமை இயக்குநர் பதவியில் இருக்கும் புருஷோத்தம சர்மா என்பவர் தன் மனைவியை அடித்து உதைத்த வீடியோ வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, அவரைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
புருஷோத்தம சர்மா தன் மனைவியை அடிப்பதும், அப்போது அங்கு இரண்டு பேர் அவரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்ததும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
ஆனால் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் புருஷோத்தம் சர்மா, இது குடும்பத் தகராறு, என்னை என் மனைவி சந்தேகப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கிறார், நான் எங்கு செல்கிறேனோ அங்கேயே பின் தொடர்ந்து வருகிறார், வீட்டில் நான் என்ன செய்கிறேன் என்பதை கவனிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார் என குற்றம் சாட்டினார்.
'நான் அவதூறாகப் பேசியிருந்தாலோ அல்லது தவறாக நடந்திருந்தாலோ என் மனைவி புகார் அளித்திருப்பார், இது குடும்பச் சண்டை, குற்றம் கிடையாது. நான் வன்முறையாளனும் அல்ல கிரிமினலும் அல்ல. நான் இதை அனுபவிக்க வேண்டும் என்பது என் துரதிர்ஷ்டமே.
2008-ம் ஆண்டில் ஒருமுறை எனக்கு எதிராக புகார் எழுப்பினார். ஆனால் என் வீட்டில்தான் வசித்து வருகிறார், சகல வசதிகளையும் அனுபவித்து வருகிறார், என் பணத்தில் வெளிநாடுகளுக்கெல்லாம் பயணம் மேற்கொள்கிறார்.' என அரசு அதிகாரி புருஷோத்தம் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் மாநிலத்தின் மகளிர் உரிமை செயல்பாட்டாளர், வர்ஷா மிஸ்ரா கூறும்போது, 'பெண்களை அடிமைகளாகவும், பொருளாகவும் தான் பார்க்கின்றனர். ஒரு உயரதிகாரியிடமிருந்து மக்கள் நல்ல குணங்களை பெற வேண்டுமே தவிர இப்படி மனைவியை அடித்து கொடுமை படுத்துவது போன்றவற்றை ஏற்க மாட்டார்கள்.
கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரி அடிப்பதை ஏற்க முடியாது, அவர் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கலாம் ஆனால் அதற்காக விட்டு விட முடியாது, கடும் தண்டனை வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'வானத்த தொடும் உயரத்தில பனை மரம்!.. அதோட உச்சிக்குப் போய்... உயிரை பணயம் வைத்து... இளைஞர் செய்த 'நடுங்க' வைக்கும் செயல்!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- 'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!
- 'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ!'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!'...
- “கொரோனா வந்துடுச்சு.. இனி பொழைக்க மாட்டேன்”.. கணவரிடம் இருந்து வந்த போன்.. தேடிச்சென்று ஷாக் ஆகி நின்ற போலீஸார்!
- 'மகன் சொன்ன சாட்சியை நம்பி.. மனைவியை கொன்றதாக கணவரை கைது செய்த போலீஸார்!'.. 'எல்லாம்' முடிந்த பின் நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்!
- Video: 'யார்ரா இது...! கால்ல வந்து அசிங்கம் பண்றது...' 'கண்ண தொறந்தா முரட்டு கரடி...' 'ஆஹா...! சிக்கிடோம்டா சேகருன்னு நினச்சவருக்கு...' - எதிர்பாராம நடந்த ட்விஸ்ட்...!
- 'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...
- "அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!
- 'பிரபல டிவி ஷோவிலிருந்து'... 'மனைவிக்கு போன் செய்தபோது கேட்ட ஆண் குரல்'... 'எத்தன ட்விஸ்ட்டு'... 'வைரல் சம்பவம்!'...