"நடு ராத்திரி தான் கரெக்ட்டான டைம்..".. அப்பாவுக்கே ஸ்கெட்ச் போட்ட மகன்..எல்லாம் முடிஞ்சதுன்னு நினைக்கும்போது போலீசுக்கு வந்த சந்தேகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் பணம் கொடுக்க மறுத்த அப்பாவை, மகனே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் பிச்சோர் நகரத்தை சேர்ந்தவர் மகேஷ் குப்தா. 59 வயதான இவருடைய மூத்த மகன் அணில் குப்தா ராணுவத்தில் பணியாற்றிவந்ததார். கடந்த ஆண்டு அவர் மரணமடையவே இழப்பீடாக மகேஷ் குப்தாவுக்கு 1 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதனிடையே தனது இளைய மகன் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார் மகேஷ் குப்தா. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு குப்தா மர்ம நபரால் கொல்லப்பட்டார்.
வெளியே வந்த உண்மை
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் குப்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இந்த சம்பவம் குறித்து குப்தாவின் இரண்டாவது மகனான அங்கித்திடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். அப்போது அவருடைய சமூக வலைதள நடவடிக்கைகளை போலீசார் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போதுதான் மொத்த விஷயமும் வெளியே தெரியவந்திருக்கிறது.
அங்கித் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் சட்டவிரோதமான காரியங்களிலும் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் குப்தா - அங்கித் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
திட்டம்
இதனிடையே குப்தாவுக்கு ஒரு கோடி ருபாய் கிடைக்கவே, அதனை தன்னிடம் கொடுக்குமாறு அங்கித் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு குப்தா மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அங்கித் சமூக வலை தளங்கள் வாயிலாக கூலிப்படையை கண்டு பிடித்திருக்கிறார். பீகாரை சேர்ந்த அஜித் குமார் என்பவரை தொடர்புகொண்ட அங்கித், தனது தந்தையை கொலை செய்ய 1 லட்சம் கொடுக்க முன்வந்திருக்கிறார். அதன்படி 21 ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும்படி அஜித்திடம் தெரிவித்திருக்கிறார் அங்கித்.
அவரது திட்டப்படியே குப்தா கொல்லப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அங்கித்தின் மொபைல் போன் மூலமாக அவரையும், கூலிப்படையையும் இதற்கு உறுதுணையாக இருந்த குப்தாவின் நண்பர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பண பிரச்சனை தீரணும்னா பரிகாரம் பண்ணனும்".. மனைவியின் பேச்சை நம்பி ஆற்றங்கரைக்கு சென்ற கணவர்.. அடுத்த நிமிஷமே நடந்த பயங்கரம்..!
- காதலியை Impress பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- "அவ அம்மா இறந்த கொஞ்ச நாள்லயே அப்பாவும் விட்டுட்டு போய்ட்டாரு.. ஆனா இப்போ..".. CBSE தேர்வில் சாதிச்ச பேத்தியை நினச்சு உருகிய பாட்டி..!
- ஆளே இல்லாத வீடு.. "அங்க இருந்த ஃப்ரிட்ஜ் கதவ தொறந்தப்போ.." அதிர்ந்த போலீசார்.. குலை நடுங்க வைத்த சம்பவம்
- "என் பொண்டாட்டிய என்கூட சேர்த்துவைங்க.. இல்லைன்னா".. மொபைல் டவர் மீது ஏறிய கணவன்.. பதறிப்போன கிராம மக்கள்..!
- "அவரு Bag'ல ஏதும் இல்ல, ஆனா, வயித்துக்குள்ள தான்.." சென்னை Airport வந்த பயணி.. சோதனையில் மிரண்டு போன அதிகாரிகள்
- 40 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மனைவி.. ஒரே ஒரு தப்பால்.. இத்தன வருசம் கழிச்சு மாட்டிய கணவர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி
- "என்ன மண்ட ஒரு மார்க்கமா இருக்கு".. ஏர்போர்ட்ல சிக்கிய 3 பேர்.. தலையில இருந்து உருவப்பட்ட லட்சக்கணக்கான பணம்.. வைரல் வீடியோ..!
- "இவருல்லாம் லட்சத்துல ஒருத்தரு".. வயசான அப்பா அம்மாவை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை போகும் மகன்.. IPS அதிகாரி பகிர்ந்த கலங்கவைக்கும் வீடியோ..!
- "சிங்கிள் ஆளா Bank உள்ள வந்து.. கொள்ளையடிச்ச பாட்டி".. விசாரணையில் வெளிவந்த ஷாக்-ஆன தகவல்..தீவிர தேடுதலில் போலீஸ்..!