"பாலத்துக்கு மேல Bus போயிட்டு இருந்தப்போ.." திடீர்ன்னு நேர்ந்த விபத்து.. உள்ளே இருந்தவர்கள் நிலை என்ன??.. வெளியான அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ராவில் இருந்து புனே நோக்கி சென்ற பேருந்து ஒன்று, திடீரென பாலம் ஒன்றின் மீது சென்ற போது நிகழ்ந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பஜ்ஜி சுட்ட எண்ணெயில்.. 9 வருஷமா ஓடும் கார்.. வியக்க வைக்கும் வாலிபர்.. "ஐடியா'வே சும்மா அமர்க்களமா இருக்கே.."

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் இருந்து, மகாராஷ்டிர மாநிலம் புனே வை நோக்கி பேருந்து ஒன்று, ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது.

மேலும், இந்த பேருந்தில் சுமார் 50 பேர் வரை பயணித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, கால்கட் என்னும் இடத்தில், நர்மதா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது.



அந்த சமயத்தில், திடீரென பாலத்தின் தடுப்பை உடைத்த பேருந்து, நேரடியாக ஆற்றிற்குள் சென்று விழுந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சென்றவர்கள் பீதியில் உறைந்து போயினர். இது தொடர்பாக, தகவலறிந்து மீட்புக் குழுவினர், விரைந்து செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 13 பேர் வரை பலி ஆனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே போல, சுமார் 15 க்கும் மேற்பட்டோர், காயம் அடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஆற்றில் இருந்து பேருந்தும் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. ஆற்றின் நீர் போக்கு சற்று அதிகமாக இருப்பதால், மீட்பு பணியை துரிதப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விபத்துக்குள் ஆன பேருந்து, மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமானதாகும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். அதே போல, பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாயையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பேருந்தில் ஸ்டியரிங் அல்லது பிரேக்கில் ஏதாவது ஒன்றில் பழுது ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "அதான் கடைசி ODI மேட்ச்.." ஓய்வு அறிவிப்புடன் பென் ஸ்டோக்ஸ் உருக்கமான ட்வீட்.. கலங்கிய ரசிகர்கள்

MADHYA PRADESH, ACCIDENT, NARMADA RIVER, BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்