ஒரே ட்ராக்கில் ‘எதிரெதிரே’ வந்த இரு ரயில்கள்.. ‘நேருக்குநேர்’ மோதி கோரவிபத்து.. 3 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் ரிஹாண்ட் நகரில் தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனம் (என்டிபிசி) இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராவ்லி பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்துகொண்டு இருந்துள்ளது. அப்போது அதே வழித்தடத்தில் எதிரே காலிப்பெட்டிகளுடன் மற்றொரு சரக்கு ரயில் வந்துகொண்டு இருந்துள்ளது. இதனால் இரு ரயில்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்த விபத்தில் லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் என்டிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான வழித்தடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதால் இது இந்திய ரயில்வே கட்டுப்பாட்டில் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

TRAINACCIDENT, TRAIN, KILLED, SINGRAULI, MADHYAPRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்