140 வருஷ பழமையான ஸ்கூலை காணோம்.. சாலை ஓரத்தில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள்.. உத்திர பிரதேசத்தில் நடந்த வினோதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் தங்களது 140 ஆண்டுகால பழமையான பள்ளியை காணவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertising
>
Advertising

உத்திர பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் கோலாகஞ்ச் பகுதியில் இருக்கிறது சென்டென்னியல் மேல்நிலைப்பள்ளி. 140 வருடங்களாக இயங்கிவரும் இந்த பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் பள்ளியானது திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கோடை விடுமுறை கழித்து மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பள்ளியை காணவில்லை

அரசு உதவிபெறும் சென்டென்னியல் மேல்நிலைப்பள்ளி இயங்கிவந்த கட்டிடத்தில் வேறொரு தனியார் பள்ளியின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கின்றனர். பின்னர் பள்ளிக்குள் நுழைய அவர்கள் முயன்ற போது, புது பள்ளி நிர்வாகம் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டது.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 360 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் பள்ளியின் வாசலிலேயே நின்றிருக்கிறார்கள். அதன்பிறகு வேறு வழியின்றி, சாலை ஓரமாகவே வகுப்புகளை எடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். மேலும், பள்ளியின் உடைமைகள் அனைத்தும் வெளியே கிடப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மாற்றம்

இதுகுறித்து பேசிய சென்டென்னியல் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராஜீவ் டேவிட் தயாள்,"நங்கள் சென்றபோது பள்ளியின் பெயர் மாற்றப்பட்டிருந்தது. எங்களை உள்ளே விட மறுத்துவிட்டார்கள். மேலும், எங்களது பள்ளியில் இருந்த பொருட்கள் வெளியே கிடந்தன. அவர்களிடம் கேட்டபோது விளையாட்டு திடலில் உள்ள தகர கொட்டகைக்கு பள்ளி மாற்றப்பட்டு விட்டதாக கூறினர் " என்றார்.

பள்ளியின் முதல்வர் ராஜீவ் டேவிட் தயாள் உடனடியாக அடிப்படை கல்வி அதிகாரி விஜய் பிரதாப் சிங் மற்றும் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் ராகேஷ் குமார் ஆகியோரிடம் புகார் அளித்திருக்கிறார். இது உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCHOOL, UP, MISSING, பள்ளி, உத்திர பிரதேசம், கல்வி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்