'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் தவிப்பு இல்லாமல், கொரோனா பாதித்ததற்கான புதிய அறிகுறி குறித்து மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் தவிப்பு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும், அறிகுறியே இல்லாமல் பலபேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதித்த பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் சுவை மற்றும் மணம் அறியும் திறன் இல்லாமல் போவது கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று மத்திய அரசு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள், இருமினாலோ, தும்மினாலோ அவர்களிடமிருந்து  கொரோனா மற்றவர்களுக்கு உடனடியாக பரவும். இதய பிரச்சினை, இரத்த  அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா பாதித்தவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நுண்ணிய நீர்த்துளிகள், காற்று மற்றும் திடப்பொருட்களில்  விழுந்து  அப்படியே இருக்கும். இதனை நாம் கைகளால் தொட்டு மூக்கு, வாய் அல்லலது கண்களில் வைக்கும்போது கொரோனா பரவி விடும்.

தற்போது வரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதிலிருந்து நம்மை நாம் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். இந்த சூழலில் மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த புதிய அறிகுறிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்