‘பகல் எது, இரவு எதுனு தெரியாம லாரியிலேயே கிடந்தேன்’.. ‘ஊரடங்கு முடிஞ்சிரும்னு இருந்தேன்’.. ‘ஆனா..!’.. லாரி டிரைவர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு அறிவிப்பால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் லாரியிலேயே 40 நாள்கள் தங்கிருந்த அனுபவம் குறித்து லாரி டிரைவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அந்நிறுவன வேலைக்காக கடந்த மார்ச் 22ம் தேதி டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு லாரியில் கிளம்பியுள்ளார். டெல்லி-ராஜஸ்தான் எல்லையில் மார்ச் 23ம் தேதி அவர் சென்றுகொண்டிருந்தபோது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ராஜஸ்தானுக்குள் செல்ல அனுமதி கிடைக்காமலும், திரும்ப டெல்லி செல்ல முடியாமலும் ராஜஸ்தான் எல்லையிலேயே சிக்கி தவித்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி லாரியிலேயே தங்கியுள்ளார். கிட்டத்தட்ட 40 நாட்கள் லாரியிலேயே நேரத்தை கழித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த சுனில், ‘நான் லாரியில் அரிசியும், ஸ்டவ் அடுப்பும் வைத்திருந்தேன். அதை வைத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால் சில நாட்களில் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போயின. பின் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டேன். பகல் எது இரவு என்ற வித்தியாமெல்லாம் தெரியாத அளவுக்கு லாரிக்குள்ளேயே இருந்தேன். சில நாள்கள் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரவை கழிப்பேன்.
ஏப்ரல் 24ம் தேதி ஊரடங்கு முடிந்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சில நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றமுடியாமல் குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவிப்பேன். இந்த 40 நாள்களில் என் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. என் கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாமல் வாடினேன். வீட்டிற்கு செல்ல முடியுமா, முடியாதா என தினமும் யோசிப்பேன்.
40 நாள்கள் கடந்த பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டது. உடனே லாரியை எடுத்துக்கொண்டு மே 5ம் தேதி டெல்லிக்கு சென்றேன். அங்கு லாரியை ஒப்படைத்துவிட்டு மே 9ம் தேதி சொந்த ஊருக்கு வந்தேன். எனக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என வந்தது. ஆனால் நான் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி என் மனைவியின் பிரசவம் முடிந்த பின்னரே டெல்லி செல்வேன். வீட்டில் தூங்கும்போது சில நேரம் லாரியில் தூங்குவது போலவே தோன்றும்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குடும்பத்தோடு தவிப்பு'... '21 ஆயிரம் கிமீ, 30 மணி நேர பயணம்'.... சென்னைக்கு பறந்த 'ஏர்ஆம்புலன்ஸ்'!
- "மகா பிரபு.. நீங்க இங்கயும் வந்துட்டீங்களா!"... 'கிட்ஸ்களுக்காக கனடா 'பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்' அடுத்த 'பிரவேசம்'.. நிறையும் பாராட்டுகள்!
- இதெல்லாம் எப்ப தான் முடியும்!? வெளியான ஆய்வு முடிவுகள்!.. ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!
- 'எல்லாம் உங்க கைல தான் இருக்கு '... 'இத மட்டும் செய்யல, இந்தியாவில் பலருக்கு வேலை பறிபோகும்'... FICCI எச்சரிக்கை!
- செல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா!? அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்!.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு!
- 'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
- இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்!.. சொந்த நாட்டு மக்களை அழைத்து வர வேண்டிய விமானம்... சுக்கு நூறாக வெடித்துச் சிதறிய பயங்கரம்!
- மதுபானங்களை "ஹோம் டெலிவரி" செய்யத் தயாராகும் மாநிலங்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. தமிழகத்தின் நிலை என்ன?
- '3 வருஷ லவ் சார்'... 'கல்யாணத்துக்கு கால் டாக்ஸி டிரைவர் போட்ட பட்ஜெட்' ... அசந்து போன சொந்தக்காரர்கள்!
- 'சென்னை மக்களே இந்த மேம்பாலதை மறக்க முடியுமா'... '87 வருஷம் பழசு'... ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் இடிக்கப்பட்ட மேம்பாலம்!