'விஜெய்பாரத்'.. அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகும் 'மோடி 2.0’ .. வைரலாகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நீங்கலாக, தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட இந்தியாவில் 542 தொகுதிகளிலும் 7 கட்டமாக நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக இந்தியா முழுவதும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பெருவாரியான வெற்றி என்கிற நிலைக்கு பின் இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மே 23, 2019) பதிவிட்டுள்ள  முதல் ட்வீட் வைரலாகி வருகிறது. அதில், ‘நாம் வலுவான மற்றும் செறிந்த ஒரு இந்தியாவை ஒன்றாகவும் செழிப்புடனும் நம் வளர்ச்சியின் மூலம் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்றது. விஜெய்பாரத்!’ என்று மோடி கூறியுள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில், அதாவதுசுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை வகித்திருப்பதும், 320 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிப்பதும், பாஜகவின் வெற்றியை பேச்சளவில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும், நாளை (மே 24, 2019) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும், வரும் 26-ஆம் தேதி பிரதமர் மோடி, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்