இந்தியாவின் அடுத்த பிரதமராக யாருக்கு வாய்ப்பு? வெளியான மாபெரும் கருத்து கணிப்பு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 142 இடங்களிலும், மற்ற கட்சிகள் 94 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நைவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரீ பப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 287 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், மற்ற கட்சிகள் 127 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழத்தில் திமுக கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நைவ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.என்.என் மற்றும் நியூஸ் 18 சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 22 முதல் 24 இடங்களிலும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது வெறும் கருத்துக் கணிப்பு மட்டுமே வரும் மே 23 -தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பின்னர்தான் எந்த கட்சி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது என தெரிய வரும்.

LOKSABHAELECTIONS2019, EXITPOLL2019

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்