மீண்டு(ம்) வருமா பாஜக?.. 'பெருவாரியான' தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. கள நிலவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா17வது மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என இந்தியாவை நோக்கி உலகம் முழுவதும் கவனம் குவிந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்கிற சூழலில், 542 தொகுதிகளில் நிகழ்ந்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விறுவிறு நிலையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளிலும், பிரதமர் மோடி பாஜகவின் வேட்பாளராக வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். முதலில் ராகுல் காந்தி அமேதியில் முன்னிலையில் இருந்ததாகவும், பின்னர் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதேபோல் மத்தியில் ஆளும் பாஜகவைப் பொருத்தவரை சுமார் 295 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், காலை 10.30 மணி வரையிலான களநிலவரப்படி 295 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதாகவும், மொத்தம் 542 தொகுதிகளில் நிகழ்ந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான முன்னிலை விபரங்கள் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த பிரதமர் யார்'?... தயாரான 'வாக்கு எண்ணும் மையங்கள்'... '3 அடுக்கு பாதுகாப்பு'!
- 'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்!
- 'நாங்க அதிரடியும் காட்டுவோம்'... கலக்கும் 'பெண் அதிகாரிகள்'!... கொண்டாடிய நெட்டிசன்கள்!
- “தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”?... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன?
- தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!
- 'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ!
- உயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'!
- 'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'?...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'!
- 'மோடி திரும்பவும் பிரதமராவாரா??’.. ரஜினி கூறிய பதில்!
- 'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!