“அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது!.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்!”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 692 ஆகவும், உயிரிழப்பு 4 ஆயிரத்து 531 ஆகவும் உள்ளது.

Advertising
Advertising

அதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்புக்கு 86 ஆயிரத்து 110 பேர் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கம் எனப்படும் லாக்டவுன் 4வது ஊரடங்கைப் பொருத்தவரை, சற்றே மாறுபட்ட வகையில், பல இடங்களில் தளர்வுடனும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வரும் முன்னரே, அதற்குள் 5-ஆம் கட்ட லாக்டவுன் பற்றிய பேச்சுகளை ட்விட்டர் வாசிகள் தொடங்கிவிட்டனர். அதன் ஒரு அம்சமாக பள்ளிகள் விடுப்பில் இருந்ததால், தங்களை மறந்து ஆடும் பள்ளிக் குழந்தைகளின்

வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. பலரும், “இப்படியே போனா என்னங்க அர்த்தம்..

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?” என்றும்,

பலர், “அடுத்த லாக்டவுன் தளர்வுகளுடன் வந்தால், மீண்டும் கொரோனா மில்லியன் கணக்கில் தலைதூக்கிவிடும்”

என்றும் பலவிதமான கருத்துக்களை #Lockdown5 என்கிற ஹேஷ்டேகின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்