கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* பொது வினியோகத்துறை செயல்படும்.
* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.
* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எவை இயங்காது?
*இ -வர்த்தகத்தில் அத்தியாவசியமற்ற சேவைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை இ வணிகம் மூலம் பெற முடியாது.
* சினிமா திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், மால்கள், மத வழிபாட்டுக் கூடங்கள் உள்ளிட்டவைக்கு மே 3-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்!' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்!'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'!
- "வண்டில இருந்து கைய எடுங்க சார்!".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!.. வீடியோ!
- '82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'
- இந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... "இவங்க இதுல கில்லாடிகள்..." 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...
- 'ஒரு வென்டிலேட்டரில்' 7 பேருக்கு 'சிகிச்சை...' 'புதிய சாதனத்தை' உருவாக்கிய 'பாகிஸ்தான் டாக்டர்...' 'வித்தியாசமாக' நன்றி தெரிவித்த 'அமெரிக்க மக்கள்...'
- பாதுகாப்பு உடைகளாகும் 'ரெயின்' கோட்டுகள்... '4 லட்சம்' பேர் வரை உயிரிழக்கும் 'அபாயம்'... திடீரென 'உயரும்' பாதிப்பால் 'உறைந்துள்ள' நாடு...
- 'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'
- 'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை?... வெளியாகியுள்ள 'பட்டியல்'...
- "மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்..." 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'
- 'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா!