'எவ்வளவு கஷ்டப்பட்டோம், ஆனா ஒண்ணும் நடக்கல'... 'கொரோனா செஞ்ச நல்ல காரியம்'... மகிழ்ச்சி ஆரவாரத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தை இயற்கை தன்னை புனரமைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்குப் பெரிய உதாரணமாக யமுனை நதி மாறியுள்ளது.

தற்போது ஊரடங்கு காரணமாகத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால், கழிவுகள் கலக்காமல் நதி மெல்ல மறுசீரமைப்பை அடைந்துவருகிறது. நதியில் நடந்துள்ள மறுசீரமைப்பு மூலம் நீரில் கலந்த ஆக்சிஜனின் அளவு யமுனை நதியில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக டாடா ஆய்வு வளர்ச்சி மையத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நதி சுத்தமாக அதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆக்சிஜன் அளவு உயர்ந்துள்ளது நதியில் வாழும் நீர் வாழ் உயிரினங்கள் செழிக்க உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதியில்'வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா வளர்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காரணமாகக் கங்கை நதியில் ஆக்சிஜன் அளவு உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்