ஊரடங்கால் தூய்மையான 'புண்ணிய' நதிகள்... அதைவிட இந்த 'அதிசயம்' தான் செம ஹைலைட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏராளமான நன்மைகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது. இதுதவிர கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் நீரின் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
பல்லாண்டுகளாக பல கோடிகள் செலவு செய்தும் சுத்தப்படுத்த முடியாத கங்கை, யமுனை நதிகள் தற்போது தெளிவாக காட்சியளிக்கின்றன. மேலும் நீரில் டால்பின்கள், மீன்கள் ஆகியவை துள்ளிக்குதிக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதேபோல தமிழகத்திலும் தாமிரபரணி நீரின் தரமும் தற்போது உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கங்கை, யமுனை நதிகளின் நீரானது குடிக்கும் அளவு தரம் உயர்ந்து இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மனிதர்களால் நடத்தப்படும் சடங்குகள் குறைந்ததாலும் கங்கை, யமுனை நதிகள் தூய்மை அடைந்துள்ளதாகவும், தற்போது குடிப்பதற்கு ஏற்ப நீரின் தரம் உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'!
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி!.. அமெரிக்கா அறிவிப்பு!
- 'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'!.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'!
- சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா!.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- இரண்டு 'பெரிய' வண்டிகள் முழுதும் 'அழுகிய' உடல்கள்... 'ஆடிப்போய்' நிற்கும் நாடு!
- 'சென்னையில்' 98% பேருக்கு 'இந்த' வகை கொரோனா பாதிப்பே... மாநகராட்சி ஆணையர் கூறியுள்ள 'முக்கிய' தகவல்...
- உணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா!.. பதற்றத்தில் உலக நாடுகள்!.. என்ன நடக்கிறது?
- '160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்'... 'உலக தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை'!
- 'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...