லாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாரியில் இருந்து பாதியில் இறக்கி விடப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் நடந்து, சைக்கிளில், லாரிகளில் என பல்வேறு வழிகளில் தமது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சொந்த ஊருக்கு பயணம் செய்த இளைஞர் ஒருவர் நடுவழியில் இறக்கி விடப்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அம்ரித், யாகூப் இருவரும் வேலை தேடி குஜராத் வந்தவர்கள். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல 4000 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி நின்றுகொண்டே பயணம் செய்து இருக்கின்றனர். இதில் அம்ரித்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். யாகூப்பும் நண்பனுடன் சேர்ந்து இறங்கி விட்டார். உடல்நலம் குன்றிய அம்ரித் லாரியில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைய, அவரை மடியில் வைத்துக்கொண்டு யாகூப் வழியில் போவோர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து உள்ளூர் மக்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
அம்ரித்தை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்துள்ளார். நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- தமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா?.. ஒரே நாளில் 4 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- 'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க!
- "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா!?".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா!.. என்ன நடந்தது?
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- இந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்!.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!.. தமிழகத்தில் மட்டும் 6!
- "சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா!".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'!
- 'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு!'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'!
- "அந்த நோய்க்கு ஒரு வாசனை இருந்துச்சு!.. அதே மாதிரி கொரோனாவையும் இவங்க கண்டுபிடிப்பாங்க".. அடுத்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து!
- "ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்!" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்!