லாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த லாக்டவுன் 3.0 இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து முன்பே சொன்னது போல 4-ம் கட்ட லாக்டவுன் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் முன்னதாக ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அதில் 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மே 31-ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்து இருக்கும் மத்திய அரசு அதுகுறித்த புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

தொடரும் தடைகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடை தொடரும். மருத்துவ சேவை, ஏர் ஆம்புலன்ஸ், பாதுகாப்பு தேவைகள் அல்லது உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கு இந்தத் தடை இல்லை.

மெட்ரோ ரயில் சேவைகளுக்குத் தடை. பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். உணவகங்களில் டோர் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி.

திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்களில் தடை தொடரும். விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி. அதேநேரம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

போக்குவரத்து

பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம்.

மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி போக்குவரத்து இயக்கம் இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

லாக்டெளன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் , சிவப்பு,ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, வீட்டுக்கு வீடு ஆய்வு.

இந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே வருவதற்கோ அனுமதி கிடையாது.

இரவு நேரம்

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.

தளர்வுகள்

மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நடமாட்டத்தைத் தடுக்கக் கூடாது.

சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே வந்து செல்ல தடை இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்