'கல்யாணம் பண்ணாமல் சேர்ந்து வாழலாமா'?... நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏற்கனவே திருமணமான ஒருவர், திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் சிங் ரத்தோர் என்பவரும் அவருடன் இணைந்து வாழ்ந்துவரும் பெண்ணும் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் பந்தாரி, ஹேமந்த் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் பாதுகாப்பு வழங்கமுடியாது என்றும், ஏற்கனவே திருமணமான ஒருவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வது அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருமணம் செய்ய உகந்த வயதை அடைந்தவர்கள், ஏற்கனவே திருமணமாகாதவர்களுடன் மட்டுமே இணைந்து வாழமுடியும் எனக் கூறியதைச் சுட்டிக்காட்டி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மற்ற செய்திகள்