என்னது ‘லிப்ஸ்டிக்’ தாவரமா..! இந்தியாவில் 100 வருசத்துக்கு அப்புறம் கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நூறு ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு

கடந்த 1912-ம் ஆண்டு பிரிட்டிஷ் தாவரவியல் வல்லுநரான ஸ்டீஃபன் ட்ராய்ட் டன் என்பவர் அருணாசல பிரதேசத்தில் ‘லிப்ஸ்டிக்’ தாவரம் என அழைக்கப்படும் அரிய வகை தாவரத்தை கண்டறிந்தார். அதன் தாவர பெயர் Aeschynanthus monetaria Dunn என அழைக்கப்படுகிறது.

குழாய் போன்ற சிவப்பு நிறத்தாலான ஈஸ்கினாந்தஸ் தாவர வகை போல இது இருப்பதால் லிப்ஸ்டிக் தாவரம் என அழைக்கப்படுவதாக இந்திய தாவரவியல் விஞ்ஞானி கிருஷ்ணா சவ்லு அண்மையில் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாசல பிரதேசத்தின் ஆன்ஜாவ் மாவட்டத்தில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது சில தாவர மாதிரிகளை சேகரித்தாகவும், அதனை ஆய்வுக்குட்படுத்தியபோதுதான் அவை இந்தியாவின் லிப்ஸ்டிக் தாவரம் என்பது தெரிய வந்ததாகவும் கிருஷ்ணா சவ்லு தெரிவித்துள்ளார்.

இந்த லிப்ஸ்டிக் பூ 543 முதல் 1134 மீட்டர் உயரத்தில் உள்ள பசுமையான ஈரப்பதம் நிறைந்த காடுகளிலேயே வளரும். இதன் பூக்கும் மற்றும் கனியும் காலம் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரியவகை தாவரமாக கருதப்படும் இது அழியும் தன்மையுடைது என்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 110 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் லிப்ஸ்டிக் தாவரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘தன் காதலனை காதலித்த வேறொரு பெண்?’.. விஷயம் தெரிஞ்சு முன்னாள் காதலனுடன் சேர்ந்து பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் பரபரப்பு..!

ARUNACHAL PRADESH, LIPSTICK PLANT, லிப்ஸ்டிக் தாவரம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்