'இனிமேல் பசிச்சா சிங்கம் புல்லை தின்னும் டூட்'...'ஆச்சரியப்பட வைக்கும் காரணம்'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புலி பசிச்சாலும் புல்லை தின்னாது என்ற பழமொழி வழக்கமாக கூறப்படுவது உண்டு. ஆனால் அதற்கு நேர்மாறாக  சிங்கம் தாவரங்களை உண்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டிற்கே ராஜா என்று அழைக்கபடும் சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் வழக்கத்தை கொண்ட மிருகமாகும். குஜராத் மாநிலம் கிர் காட்டில் உள்ள சிங்கம் தான் தற்போது தாவரத்தை உண்டு வைரலாகியுள்ளது.

சிங்கம் எப்படி தாவரத்தை உண்ணும் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் கேள்வியாக உள்ளது. அதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்கள். சிங்கம் மட்டுமல்ல, அனைத்து விலங்குகளும் தாவரங்களை உண்ணக் கூடியவை தான். அசைவ விலங்குகளை பொறுத்தவரை உணவு செரிமானத்திற்காக இது போன்ற சிறு தாவரங்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான். மேலும் இது இயற்கையான நிகழ்வே என்று வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்

இதனிடையே இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள், புலி பசித்தால் புல்லை தின்னாது. ஆனால் சிங்கம் பசித்தால் புல்லை உண்ணுமா என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.

SINGAM, LION, GIR FOREST, GUJARAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்