ஆதாருடன் - பான் நம்பரை இணைக்க... இந்த நாள் தான் கடைசி... ஆன்லைனில் இணைப்பது எப்படி?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு தொடங்குவது, மானியங்களை பெறுதல் உள்ளிட்ட செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஆதார் எண்ணை, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறி வருகிறது.
இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடு அளித்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதியுடன் 3 மாத கால அவகாசம் முடிவடைவதால், அன்றைய தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றமும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் கட்டாயம் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
1. https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
2. Link Aadhaar என்ற திரை தோன்றும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ!'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!
தொடர்புடைய செய்திகள்
- ‘பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும்’.. ‘காலக்கெடு நீட்டிப்பு’.. ‘இணைப்பது எப்படி?’..
- ‘2 நாட்களில் ஆதாருடன் இணைக்காவிட்டால்’.. ‘பான் கார்டு காலாவதியாக வாய்ப்பு’.. ‘இணைப்பது எப்படி?’..
- ‘ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு’.. ‘இனி எல்லாமே ஒரே அடையாள அட்டையில்’..?
- 'எப்படி சார் மேனேஜ் பண்ணுனீங்க'...' ஒரே ஒரு ஆள்'... 'மூணு இடம்'...'30 வருசமா அரசுக்கு டிமிக்கி'!
- 'ஏடிஎம்'-ல் பணம் எடுக்க இனிமேல் வரி'?... 'மத்திய அரசு' அதிரடி...'கருப்பு பண' தடுப்பா?
- 'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!