'இந்திரா காந்தி மாதிரியே' நானும் தீர்த்துக் கட்டப்படலாம்: கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கொலை பற்றிய பகிரங்கமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை கிளப்பியுள்ளது.

பஞ்சாபின் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவினால் தனக்கு ஆபத்து உள்ளதாகவும், என்றாவது ஒருநாள் அந்த கட்சி தன்னைக் கொன்றுவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

சமீபத்தில் டெல்லி மோதி நகரில் நிகழ்ந்த பேரணி ஒன்றில் கெஜ்ரிவால் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். அந்நபரை கைது செய்து, விசாரித்தபோது, அந்த நபர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் என்றும், கட்சி மீதுள்ள அதிருப்தி காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலை தான் அறைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இது பாஜகவின் சதி என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதுபற்றி பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,  முதல்வரான பிறகு 6 முறை, தான் தாக்கப்பட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் தன்னைக் கொன்றுவிட்டே கூட, கொன்றவர் எனது கட்சித் தொண்டர் என்று பாதுகாப்பு காவல்துறை சொல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் தொண்டர் பஞ்சாப் முதல்வரையோ, பாஜக தொண்டர் பாஜக தொண்டர்களையோ இவ்வாறு அறைய முடியுமா என்று கேள்வி எழுப்பியவர், இந்திராகாந்தி போல் தனது தனி பாதுகாவலராலேயே, தான் எப்போது வேண்டுமானாலும் பாஜகவால் கொல்லப்படலாம் என்று குற்றம் சாட்டினார்.

BJP, ARVINDKEJRIWAL, AAP, DELHI, CHIEFMINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்