நாங்க எதுக்கு வெட்கப்படணும்? லெஸ்பியனாக இருப்பதில் பெருமை.. இந்திய முறைப்படி நடந்த 'ஓர்பால் ஈர்ப்பு' நிச்சயதார்த்தம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த இரு பெண் மருத்துவர்கள் பெற்றோர் துணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் தோழி சுரபிமித்ரா. மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இருவருமே சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.

ஒருவரை ஒருவர் அதிகளவில் புரிந்து கொண்ட பிறகே இருவரும் லெஸ்பியன் உணர்வு இருப்பதை புரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. நாளாக நாளாக அது காதலாக மாறியது.

லெஸ்பியன்:

லெஸ்பியன்களாக மாறிய அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துள்ளனர். இருவரும் டாக்டராக நாக்பூரில் பணி புரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில வருடங்களாக வசித்து வந்தனர். எனவே இந்த காதல் கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வாழ்க்கையின் கடைசி வரை ஒன்றாக வாழ வேண்டும், பிரியக் கூடாது என்பதற்காக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

எனக்கு எந்த வெட்கமும் இல்லை:

இதுகுறித்து பரோமிதா முகர்ஜி கூறுகையில், 'நானும், மித்ராவும் லெஸ்பியன்கள் என்பதை எந்த ஒளிவும் இல்லாமல் தெரிவித்துக் கொள்வதில் பெருமை தான். இதை சொல்வதில் எந்த வெட்கமும் இல்லை. எங்களுக்குள் நல்ல உறவு இருப்பதை கடந்த 2013-ம் வருடமே அப்பாவிடம் கூறிவிட்டேன்.

திருமணத்திற்கு சம்மதம்:

அண்மையில் தான் என் அம்மாவிடம் கூறினேன். முதலில் என் அம்மா கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்பு என் அப்பா மூலம் அவருக்கு புரிய வைத்தேன். இப்போது அவர்கள் இருவரும் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எனது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். வாழ்க்கை முழுவதும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். இந்த ஆண்டுக்குள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம் எங்கள் திருமணம் நடைபெறும். என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்ய முடிவு செய்தோம்:

மேலும், டாக்டர் சுரபி மித்ரா கூறும்போது, “என் குடும்பத்தில் நான் லெஸ்பியனாக இருப்பது அறிவார்கள். எனவே எனது திருமணத்துக்கு அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நான் உளவியல் பட்டப்படிப்பு முடித்தவள். எனக்கு இந்திய மக்களைப் பற்றி நன்றாகவே தெரியும். நிறைய நாள்கள் யோசித்த பின்பு தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். கடைசி வரை நாங்கள் அன்யோன்யமாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

கூட்டம் கூட்டமாக கலந்துக் கொண்ட உறவினர்கள்:

இந்த தம்பதியினரின் உயிருக்கு உயிரான காதலை அடுத்து, கடந்த 29-ந்தேதி நாக்பூரில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தபோது ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். இதனையொட்டி நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் இருவரது வீட்டு உறவினர்கள் கூட்டம் கூட்டமாக கலந்துக் கொண்டு லெஸ்பியன் தம்பதிகளை மனமார வாழ்த்தி சென்றனர்.

NAGPUR, LESBIAN, MARRIAGE, DOCTORS, ஓரின சேர்க்கை, திருமணம், லெஸ்பியன், நாக்பூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்