Video: 'வெயிட்' ரொம்ப அதிகம் அதனால என்ன?... செம 'ஸ்கெட்ச்' போட்டு... மர உச்சிக்கு மானை 'அலேக்காக' தூக்கிச்சென்ற சிறுத்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுத்தை ஒன்று மானை கொன்று, அதனை மரத்தின் உச்சிக்கு தூக்கிச்செல்லும் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்டு இருக்கிறார். காருக்குள் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று மரத்திற்கு அடியில் நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகில் வேட்டையாடப்பட்ட மான் ஒன்று இறந்த நிலையில் கிடக்கிறது. மரத்தையும், இறந்து கிடக்கும் மானையும் மாற்றி,மாற்றி பார்க்கும் சிறுத்தை சட்டென்று மானை வாயில் கவ்விக்கொண்டு மரத்தின் மீது படுவேகமாக ஏறிச்செல்கிறது.
பிரவீன் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், '' நம்ப முடியாத வகையில் மரத்தில் ஏறுகிறது சிறுத்தை. தன்னைவிட 3 மடங்கு அதிகமான இரையை கவ்விக்கொண்டு சிறுத்தையால் மரத்தில் ஏற முடியுமென்பது உங்களுக்குத் தெரியுமா?,'' என பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 11,200 லைக்குகளும், 3800 ரீ-ட்வீட்டுகளும் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது. வீடியோ பார்த்த பலரும் என்ன ஒரு துல்லியமான கணக்கு என வியந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!
- 'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!
- 'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
- ‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'!
- ‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!
- ‘இன்னும் சீரியஸாகவே எடுத்துக்க மாட்டேங்குறாங்க’... ‘வேதனை தெரிவித்த பிரதமர் மோடி’!
- 'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
- ‘பாமர மக்களுக்கும்’... ‘அந்த கருத்த கொண்டுபோய் சேர்த்ததற்கு... ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்வீட்