”ரூ.132 கோடி வரி ஏய்ப்பா?”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி!”.. “உறைய வைத்த நோட்டீஸ்!”
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம் மோகனா என்கிற இடத்தைச் சேர்ந்தவர் ரவி குப்தா. 29 வயதான ஏழை விவசாயியான இவர் மீது, வருமான வரித்துறை ரூ.132 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை ரவிகுப்தா அனுப்பிய கடிதத்தில், ‘ரவிகுப்தா குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்துவதாகவும், அவருக்கு 2011 செப்டம்பர் முதல் 2012 பிப்ரவரி வரை பலகோடி ரூபாய் நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதில் இதுவரை ரூ.132 கோடிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2019 மார்ச் மாதம் ஒருமுறையும், 2019 ஜூலை மாதம் ஒரு முறையும் நோட்டீஸ் வந்தபோது அதை தெரியாமல் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட ரவிகுப்தா, இம்முறை இந்த வரியைக் கட்டவில்லை என்றால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்கிற வருமான வரித்துறையின் நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்தே போய்விட்டார்.
அதனால் நடந்ததையெல்லாம் கூறி, தன் பெயரில் யாரோ இப்படி நிறுவனம் நடத்தி மோசடி செய்திருக்க வேண்டும் என்றும், உண்மையில் வரி ஏய்ப்பு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில், தான் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இந்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விளக்கம் அளித்து, வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா?... திருமணமாகி ‘2 வாரங்கள்’ கழித்து... மனைவி ‘ஆண்’ என அறிந்து... ‘அதிர்ந்து’ நின்ற ‘புதுமாப்பிள்ளை’...
- கணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி!
- ‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- ‘காதலிக்க’ பெண் தேவை... ‘தேர்ந்தெடுக்கப்பட்டால்’ காத்திருக்கும் ‘ஜாக்பாட்!’... தொழிலதிபரின் ‘வைரல்’ விளம்பரம்...
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- ஒரு நாளைக்கு 3 ‘சோப்’... ஒரு ‘டஜன்’ பிளாஸ்டிக் பை... 10 மணி நேரக் ‘குளியல்’... ‘விநோத’ பிரச்சனையால் ‘ஐடி’ ஊழியருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- ‘பிரபல’ வங்கியின் ஏடிம்மில்... ‘100 ரூபாய்க்கு’ பதிலாக வந்த ‘500 ரூபாய்’ நோட்டுகள்... ‘வாடிக்கையாளர்கள்’ செய்த காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- காட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...
- ஒரு ரீட்வீட்டிற்கு ‘லட்சங்களில்’ பரிசு... இன்ப ‘அதிர்ச்சி’ கொடுத்த... ‘தொழிலதிபர்’ சொன்ன ‘வேறலெவல்’ காரணம்...
- ‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...