உலகத்தின் மிகப்பெரிய திட்டம்.. 10 ஆயிரம் ஏக்கரில் மாஸ் காட்ட இருக்கும் இந்தியா.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் இரண்டாவது மிகப்பெரிய சஃபாரி பார்க்கை (safari park) கட்டமைக்க இருப்பதாக ஹரியானா முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!
ஹரியானாவின் ஆரவல்லி மலைத்தொடரில் 10,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பார்க் அமைய இருக்கிறது. குருகிராம் மற்றும் நுஹ் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய திட்டம்
இதுபற்றி அவர் பேசுகையில்,"உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். தற்போது, ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சஃபாரி பூங்கா ஷார்ஜாவில் உள்ளது. அது சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தற்போது முன்மொழியப்பட்ட ஆரவல்லி பூங்கா இதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும்" என்றார்.
இந்த சஃபாரியில் பெரிய ஹெர்பெடேரியம் (ஊர்வன மற்றும் விலங்கியல் கண்காட்சி இடம்), பறவை மற்றும் விலங்குகளுக்கான இடம், புலிகளுக்கு நான்கு மண்டலங்கள், தாவரவகைகளுக்கு ஒரு பெரிய பகுதி, நீருக்கடியில் அமையும் கண்காட்சி, பல்வேறு நில அமைப்புகளில் வளரும் தாவரங்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற இருப்பதாகவும் கட்டார் தெரிவித்திருக்கிறார்.
கட்டார் மற்றும் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவும் சமீபத்தில் ஷார்ஜா சஃபாரியை பார்வையிட்டனர். பயணம் முடிந்து ஊர் திரும்பிய நிலையில் கட்டார் இந்த பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஹரியானாவின் என்சிஆர் பகுதியானது ஜங்கிள் சஃபாரியின் வளர்ச்சிக்கு உகந்த இடம் என்றும், இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என்றார்.
நிதி
இந்த திட்டத்தின் நிதி பங்களிப்பு குறித்து பேசிய கட்டார்,"இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் ஹரியானா அரசின் கூட்டு திட்டமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு திட்டத்திற்கான நிதியை வழங்கும்" என்றார். இதுபோன்ற இடங்களை உருவாக்கும் பிரபலமான இரண்டு நிறுவங்களிடம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கட்டார் அறிவித்திருக்கிறார். மேலும், ஆரவல்லி மலைத்தொடர்களையும் அதில் உள்ள விலங்குகளையும் பாதுகாக்க இந்த திட்டம் உதவும் எனவும் கட்டார் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நேரடியா கிளாஸ்க்கு போகாதவங்களை எஞ்சினியர்-னு சொல்ல முடியாது".. உயர்நீதிமன்றம் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு.. முழு விபரம்..!
- 2 ஃபேன், பல்பு இருக்குற குடிசை வீட்டுக்கு ‘கரெண்ட் பில்’ இவ்ளோவா.. ஷாக் ஆன பெயிண்டர்..!
- கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!
- "இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..
- மூணு வருஷத்துல 5 மெர்சிடஸ் கார்.. ஒருத்தர ஏமாத்தணும்னா மொதல்ல நம்ப வைக்கணும்.. பக்காவா பிளான் பண்ணி ரூ. 2.18 கோடி மோசடி செய்த நபர்
- 'அந்த நாட்டுல' இருந்து வந்த '10 பேர்' எங்க போனாங்கன்னே தெரியல...! 'போன் வேற சுவிட்ச் ஆஃப்ல இருக்கு...' - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்...!
- 'ஜிம் போகல...' 'டயட் இருக்கல...' 21 கிலோ மெலிஞ்சுட்டேன்...! எல்லாத்துக்கும் காரணம் 'அவ' தான்...! - 'கண்ணீர்' வடிக்கும் கணவன்...!
- 'இந்தியால நீங்க அனுபவிக்குற சந்தோஷம்...' 'அங்க' போனா கிடைக்க சான்ஸே இல்ல...! - மெகபூபா முப்திக்கு 'பதிலடி' கொடுத்த அமைச்சர்...!
- 'வீட்டை விட்டு ஓடிப்போறவங்களுக்கு...' 'இங்கு திருமணம் செய்து வைக்கப்படும்...' அசர வைக்கும் பேக்கேஜ்கள், சலுகைகள்...' - குவியும் இளசுகள்...!
- VIDEO: 'ஓடியாங்க, நாம எல்லாருமே பணக்காரங்க ஆக போறோம்...' 'ஒரு கிராமமே வந்து குவிஞ்சிட்டாங்க...' 'அவங்க கேள்விப்பட்ட விஷயம் அப்படி...' - வைரல் வீடியோ...!