'ஒரு காலத்தில கொடி கட்டி பறந்து... இன்னைக்கு இப்படி ஒரு நிலைமையா'?.. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பின்னணி!.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெபாசிட்தாரர்களுக்கு திருப்பி அளிக்க தேவையான பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி நியமித்த சிறப்பு நிர்வாகி மனோகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் 1926 ஆம் ஆண்டு ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 வர்த்தகர்கள் இணைந்து தொடங்கியதே லஷ்மி விலாஸ் வங்கி. அந்த பகுதியில் வசித்த விவசாயிகள், தொழில்துறையினரின் நிதி தேவைக்காக வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், படிப்படியாக வளர்ச்சி கண்டு தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வந்தது. 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட வங்கியில், 2016 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிக தொகைக்கு கடன் கொடுப்பதில் கவனத்தை செலுத்தியதால் சறுக்கல் தொடங்கியது.
குறிப்பாக மால்விந்தர்சிங், ஷிவிந்தர்சிங்கின் சகோதரர்களின் ரெலிகேர் நிறுவனத்திற்கு அளித்த 720 கோடி ரூபாய் வாராக்கடனாக மாறியது. அதனைத் தொடர்ந்து வாராக் கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடி முற்றியது. கடந்த 3 நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டாமல் நட்டத்தை சந்தித்ததால் மூலதனம் இன்றி முடங்கும் நிலை உருவானது.
இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை கையில் எடுத்து, தற்காலிகமாக செயல்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16 ஆம் தேதி வரை அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு இடங்களில் அவசர தேவைக்காக லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி கன்டோன்மென்ட் லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது கணக்கை முடித்து பணத்தை திரும்ப பெறுவதற்காக பதற்றத்துடன் குவிந்தனர். காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து ஒவ்வொருத்தராக வங்கி உள்ளே செல்ல அனுமதித்தனர்.
கனரா வங்கியின் முன்னாள் பொறுப்பு தலைவர் மனோகரன் என்பவரை, லஷ்மி விலாஸ் வங்கியின் சிறப்பு நிர்வாகியாக ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
மேலும், சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக 2500 கோடி ரூபாயை மூலதனமாக டிபிஎஸ் வங்கி அளிக்க இருக்கிறது.
வங்கியில் டெபாசிட்தாரர்களின் பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ள மனோகரன், வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்பதால் பதற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். வங்கியின் 4 ஆயிரத்து 100 ஊழியர்களும் பணியில் நீடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை எதிரொலியாக லஷ்மி விலாஸ் வங்கியின் பங்கு விலை ஒரே நாளில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 12 ரூபாய் 45 காசுகளாக குறைந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை!'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'மொத்தம் 50 கிளைகள மூட போறோம்...' 'அதிரடி தகவலை வெளியிட்ட...' - பிரபல தனியார் வங்கி...!
- வாடிக்கையாளர்களுக்கு 'ஷாக்' கொடுத்த ஐசிஐசிஐ வங்கி...! - எல்லாத்தையும் 'அங்க' ஸ்டாப் பண்றோம்...!
- ''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'!?.. 'வட்டிக்கு வட்டி வசூலா'?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா?
- 'எப்போ பாத்தாலும் கையில அம்மாவோட மொபைல் '... 'வங்கி பாஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி'... 'பையனை விசாரித்த பெற்றோர்'... தூக்கி வாரி போட வைத்த சிறுவனின் பதில்!
- 'வெளியிலதான் பேங்க் கேஷியர்!'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'!.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்! பகீர் வாக்குமூலம்!
- 'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி!
- 'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!
- வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!
- 'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...