ஒரு வருசம் கொரோனாவுக்கு ‘தண்ணி’ காட்டிய தீவு.. முதல்முறையாக ஒருவருக்கு வைரஸ் தொற்று..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இதுவரை கொரோனா பாதிப்பே இல்லாத தீவு ஒன்றில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில்,  முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை லட்சத்தீவு பதிவு செய்துள்ளது.

கடந்த 3-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்த்தீவு சென்ற நபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கொச்சியில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்துதல் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்