கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலனை கரம் பிடிக்க கணவனை கஞ்சா வழக்கில் மனைவியே சிக்க வைக்க பிளான் போட்ட சம்பவம் கேரளாவையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் வண்டன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ். இவருடைய வயது 38 ஆகும். இவருடைய மனைவி சவுமியா (33) வண்டன் மேடு பஞ்சாயத்து கவுன்சிலர் ஆவார். இந்நிலையில், பைக்கில் கஞ்சா கடத்தியதாக சுனில் வர்கீஸை வண்டன் மேடு காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில் சுனில் வர்கீஸ் கஞ்சாவை கடத்தவில்லை என்பது உறுதியான உடனே காவல்துறைக்கு இந்த வழக்கில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேறு கோணத்தில் விசாரணையை துவங்கினர் போலீஸ் அதிகாரிகள்.இந்த வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

தகாத உறவு

சவுமியாவுக்கும் துபாயில் பணிபுரிந்துவரும் வினோத் (43) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே வினோத் அடிக்கடி துபாயில் இருந்து வண்டன் மேடு வந்து சவுமியாவை பார்த்து சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இதற்கு இடைஞ்சலாக இருக்கும் சுனில் வர்கீஸை இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கொலை செய்தால் மாட்டிக்கொள்வோம் என கஞ்சா வழக்கில் சுனிலை சிக்க வைக்க முடிவு எடுத்ததாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. 

கஞ்சா

இதனையடுத்து தனது நண்பரான ஷாநவாஸ் (39) என்பவரிடம் விபரத்தை கூறி இருக்கிறார் வினோத். அவர் மூலமாக ரூ. 45,000 மதிப்புள்ள  எம்.டி. எம். ஏ என்னும் போதை பொருள் கொச்சியில் உள்ள கும்பலிடம் இருந்து வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர் அதனை சவுமியாவிடம் ஷெபின்ஷா (24) என்பவர் மூலமாக சேர்த்திருக்கிறார் வினோத்.

திட்டப்படி, சுனிலின் பைக்கில் போதை பொருளை மறைத்து வைத்துவிட்டு வினோத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார் சவுமியா.

போலீசில் தகவல்

இதனை அடுத்து, தனது நண்பர் மூலமாக சுனில் பைக்கில் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி எஸ்.பி கருப்பசாமி வண்டன் மேடு போலீசுக்கு உத்தரவிட்டார். அப்போதுதான் சுனில் வர்க்கீஸை காவல்துறை கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அவர் குற்றவாளி அல்ல என்பதை அறிந்து காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் வினோத் - சவுமியா போட்ட திட்டத்தினை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

காதலனை கரம் பிடிக்க மனைவியே திட்டமிட்டு கஞ்சா கடத்தல் வழக்கில் கணவனை சிக்க வைக்க முயற்சி செய்த விவகாரம் கேரளாவையே உலுக்கியுள்ளது.

போலீஸ், கேரளா, கஞ்சா, KERALA, VANDANMEDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்