‘லாட்டரி பரிசு ரூ.6 கோடி’!.. ‘விவசாய நிலத்தில் புதையல்’!.. ‘அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்’.. திக்குமுக்காடிபோன நபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் விவசாயம் செய்ய தோண்டப்பட்ட நிலத்தில் செப்புக்காசு புதையல் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவணந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் பிள்ளை (60). முன்னாள் கவுன்சிலரான இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கலில் இவருக்கு ரூ.6 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. அந்த பணத்தில் திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோவில் அருகே உள்ள பழைய வீட்டையும், அதன் அருகே கொஞ்சம் நிலத்தையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய ரெத்தினாகரன் முடிவு செய்துள்ளார். அதற்காக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு மண்ணை தோட்டும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது பூமிக்குள் மண் பானைகள் புதைந்து இருந்தது தெரியவந்துள்ளது. உடனே புதைந்திருந்த 6 மண்பானைகளை எடுத்துள்ளனர்.

அதில் ஏராளமான செப்பு நாணயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வேகமாக பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து புதையல் கிடைத்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மண்பானைகளை கைப்பற்றி எண்ணிப் பார்த்துள்ளனர். அதில் 2,600 செப்பு நாணயங்கள் இருந்தததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த நாணயங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

KERALA, KILIMANOOR, ANTIQUECOINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்