இந்தியாவிலேயே.. சானிடரி நாப்கின் இல்லாத முதல் கிராமம்.. சபாஷ் போட வைக்கும் அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா : இந்தியாவிலேயே சானிடரி நாப்கின் இல்லாத முதல் கிராமம் என்ற பெருமையை கேரளாவிலுள்ள கிராமம் பெறப் போகிறது.

Advertising
>
Advertising

உலகிலுள்ள அனைத்து பெண்களும், மாதவிடாய் காலத்தில பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள் பற்றி, மக்கள் மத்தியில் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மாதவிடாய் சுழற்சியின் போது, உத்திர போக்கு ஏற்படும் நேரத்தில், இந்த சானிடரி நாப்கின்களை பெண்கள் பயன்படுத்துவார்கள்.

இந்த மாதவிடாய் காலம் குறித்து, அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், கேரள மாநிலத்திற்கும் முக்கிய பங்குண்டு. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான், முதல் முறையாக, அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கும் இயந்திரம் கட்டாயமாக்கப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது.

சானிடரி நாப்கின் இல்லாத கிராமம்

ரசாயனம் அதிகம் இல்லாத, எளிதில் அப்புறப்படுத்தும் விதமான நாப்கின்கள் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நமது நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் என்ற பெருமையை கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கும்பளங்கி என்ற கிராமம் பெறவுள்ளது. இது பற்றிய அறிவிப்பை அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனாவா? இந்திய அணியில் திடீர் மாற்றம்.. களமிறங்கிய வீரர் யார்னு பாருங்க!

 

மாதவிடாய் கப்கள்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, கும்பளங்கி என்னும் சுற்றுலா கிராமம். இங்கு வசிக்கும் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, சானிடரி நாப்கின்களுக்கு பதிலாக, மாதவிடாய் கோப்பைகள் வழங்கப்படவுள்ளது.  இக்கிராம பெண்களுக்கு மொத்தமாக, 5,000 மாதவிடாய் கோப்பைகள் முதற்கட்டமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவளுக்காக திட்டம்

இதுபற்றி, எம்.பி ஹிபி இடன் கூறுகையில், 'எர்ணாகுளம் பாராளுமன்ற தொகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள 'Avalkaayi' என்ற திட்டத்தின் அங்கமாக இது செயல்படுத்தப்படுகிறது. இது தவிர்த்து, பிரதான் மந்திரி சான்சட் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், கும்பளங்கி கிராமம், இந்தியாவின் முன் மாதிரி கிராமமாகவும் அறிவிக்கப்பட இருக்கிறது' என தெரிவித்தார்.

கேரளா 'couple share' குழுவில் இருந்த 100 மனைவிகள் ஏற்கனவே.. விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்!

விழிப்புணர்வு

பொதுவாக, பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்படும் நாப்கின்களை பெண்கள் பயன்படுத்தும் போது, அதன் மூலம் கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், நாப்கின் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும், அதே வேளையில் சுகாதாரக் கேடும் ஏற்படும் என்பதால் தான், கேரளாவில், மாதவிடாய் கப்கள் குறித்த விழிப்புணர்வை தற்போது துவங்கியுள்ளனர்.

 

KUMBALANGI, SANITARY NAPKIN, VILLAGE, சானிடரி நாப்கின், மாதவிடாய் கப்கள், விழிப்புணர்வு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்