சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்களே.. தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்களே.. தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
Advertising
>
Advertising

உலகம் முழுவதும் திருமண சடங்குகள் குறித்த பார்வை மாறியிருக்கிறது. அன்பை அளிக்கவும் பெறவும் பாலினம் தேவையில்லை எனக் கருதுபவர்கள் தங்களது விருப்பப்படி வாழ, உலகின் பல்வேறு நாடுகள் அனுமதியளித்து வருகின்றன. இந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Kshama Bindu marries herself in Gujarat first sologamy

திருமணம்

குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் தனது திருமணம் நடைபெறும் என பிந்து முன்னர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது திருமணத்தில் சிலர் சிக்கல் ஏற்படுத்தக்கூடும் என கருதி நேற்று கோத்ரியில் உள்ள தனது வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டதாக தற்போது அறிவித்திருக்கிறார்.

இந்த வைபவத்தில் மெஹந்தி, ஹால்தி போன்ற சடங்குகள் விமர்சியாக நடைபெற்றதாகவும், உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தனது திருமணம் நடைபெற்றதாக அறிவித்திருக்கிறார் பிந்து. குஜராத்தில் முதல்முறையாக இதுபோன்ற திருமணம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் என்னை நேசிக்கிறேன்

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது குறித்து முன்னர் பேசியிருந்த பிந்து,"நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஒரு வேளை நம் நாட்டில் சுய-அன்புக்கு நானே உதாரணமாக இருப்பேன் எனத் தோன்றுகிறது. சுய திருமணம் என்பது உங்களுக்காக நீங்களே இருப்பதற்கான உறுதிப்பாடு. இது சுயமாக தம்மைத் தாமே ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.

பெற்றோரின் சம்மதம்

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் பிந்து,"சிலர் சுய திருமணங்களை பொருத்தமற்றதாகக் கருதுகின்றனர். உண்மையில் இதன்மூலம் பெண்களின் தனிப்பட்ட முடிவுகள் முக்கியம் என்பதை உணர்த்த முயல்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

தனது பெற்றோரின் சம்மதப்படியே இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், "எனது தாய் மற்றும் தந்தை திறந்த மனமுடையவர்கள். ஆகவே என்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என்றார். பிந்துவின் இந்த திருமணத்தில் இந்து மத மரபுப்படி சடங்குகள் நடைபெற்றிருக்கின்றன. திருமண நிகழ்வின்போது, நண்பர்கள் மலர்தூவ மணமேடைக்கு வந்த பிந்து, தனக்கு தானே  திருமணம் செய்துகொண்டார்.

குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

SELFMARRIAGE, GUJARAT, SOLOGAMY, திருமணம், குஜராத், இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்