'முன்பே சொன்ன ஜெகன் மோகன்'...'வீட்டில் சூழ்ந்த வெள்ளம்'... அவசரமாக வெளியேறிய சந்திரபாபு நாயுடு !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா சாகர் அணைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இந்த சூழ்நிலையில் கிருஷ்ணா நதி ஆற்றக்கரைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் பேரேஜ் அணையில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் கிருஷ்ணா சொந்தமானதாகும். இந்த பங்களாவில் 4 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு வாடகைக்கு இருந்து வருகிறார். அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குள் புகுந்தது. இதையடுத்து தனது குடும்பத்தினருடன் வெள்ளம் வரும் முன்பே இரவோடு இரவாக ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படும் என, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்பே எச்சரித்திருந்தார். கிருஷ்ணா நதிகரையோரத்தில் 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற விதியை மீறியதால், நதியோரத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு கட்டிய அலுவலகம் இடிக்கப்பட்டது.

முன்னதாக ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் பங்களாவில் இருந்து சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CHANDRABABU NAIDU, RIVERFRONT HOUSE, PRAKASAM BARRAGE, JAGAN MOHAN REDDY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்