'அவ பத்திரமா இருக்காம்மா...' எங்க குழந்தை எங்கள விட்டு போய்ட்டான்னு எப்படி சொல்வேன்...? 'மனைவிடம் மறைத்து வரும் கணவன்...' நெஞ்சை உருக செய்யும் சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுபாயிலிருந்து விமானத்தின் மூலம் கேரளா சென்ற விபத்தில், தன் குழந்தை உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் மறைத்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் தொலைத் தொடர்பு தயாரிப்புகளை கையாளும் ஒரு தனியார் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணிபுரியும் 31 வயதான முர்தாசா என்பவர் தன் மனைவியின் விசா காலம் முடிவடைய உள்ளதால், சுமய்யா தஸ்னீம் (27) மற்றும் 2 வயதான குழந்தையோடு சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விபத்துக்குள்ளான விமானத்தில் சுமய்யா தஸ்னீம் மற்றும் குழந்தை ஆயிஷா பயணித்துள்ளனர். இந்நிலையில் விமான விபத்தின் போது சுமய்யா தஸ்னீ பலத்த காயங்களோடு தப்பியுள்ளார். ஆனால் அவர்களின் 2 வயது குழந்தை ஆயிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
மேலும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் தன் மனைவி சுமய்யா தஸ்னீமாவிடம் குழந்தை உயிரிழந்ததை கூறாமல் மறைத்து வருகிறார்.
இதுகுறித்து கூறும் முர்தாசா, 'நான் இதுவரை எங்கள் குழந்தை எங்களை விட்டு பிரிந்ததை சொல்லவில்லை. என் மனைவி என்னை கேட்கும்போதெல்லாம் குழந்தை வேறொரு மருத்துவமனையில் இருப்பதாக கூறிவருகிறேன்.
மேலும், எனது மனைவியும் குழந்தையும் மார்ச் 1-ம் தேதி துபாய் வந்தனர். அவர்களின் விசா ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைய உள்ளது. எனவே வந்தே பாரத் மிஷன் விமானங்களின் சேவை அறிவிக்கப்பட்டபோது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி கோழிக்கோடுக்கு செல்ல விமான முன்பதிவு செய்தேன். நான் வேறொரு தேதியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும், ஆனால் என்ன செய்வது. என்னால் நேரடியாக கோழிக்கோடு செல்ல முடியவில்லை. அதனால் என் வாழ்க்கை இப்போது மாறிவிட்டது. இப்போதைக்கு என் மனைவி நலமடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்' என்று கலக்கமடைந்த நிலையில் முர்தாசா கூறியுள்ளார்.
மேலும் மகள் ஆயிஷாவின் உடலும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...
- 'பேக் டு ஹோம்'... 'மனதை நொறுக்கும் கடைசி பேஸ்புக் பதிவு'... 'மனைவி, மகளுடன் மகிழ்ச்சியோடு கிளம்பியவருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்'...
- ‘191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விழுந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்!’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து!’
- ‘4 பேருக்காக வந்த விமானம்’.. வாடகை எவ்ளோனு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. மிரளவைத்த தொழிலதிபர்..!
- ‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!
- விமானத்தில் ‘கொரோனா’ அறிகுறியுடன் இருந்த ‘பயணி’... காக்பிட் அறை ‘ஜன்னல்’ வழியாக ‘குதித்த’ விமானி... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- 200 ஊழியர்களின் ‘வேலை கட்’... 25 % வரை ‘சம்பளம் கட்’.. கொரோனாவின் தாண்டவத்தால் விமான நிறுவனங்கள் ‘அதிரடி!’
- ‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...
- ‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...
- ‘100 பயணிகளுடன்’ கிளம்பிய விமானம்... புறப்பட்ட சில நிமிடங்களில் ‘திடீரென’ நடந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...