‘என் உயிர கொடுத்தாவது பயணிகளை காப்பாத்தணும்!!’.. ‘2 முறை தரையிறக்க போராடி, விபத்தில் உயிர்நீத்த விமானி பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி இந்திய விமானப்படையின் முன்னால் விங் கமாண்டர் என்பது தெரிய வந்திருக்கிறது.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது நடந்த விமான விபத்தில் முதன்மை விமானி தீபக் வசந்த் சாத்தே ( Deepak Vasant Sathe) மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் (Akhilesh Kumar) உயிரிழந்துள்ளனர்.
இதில் முதன்மை விமானி தீபக் வசந்த் சாத்தே இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமெண்டர் என்பது தெரியவந்திருக்கிறது. 1981 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்து தேச பணியாற்றிய வசந்த் சாத்தே திறமை வாய்ந்த போர் விமானியாக செயல்பட்டவர் என்றும் இதற்கான விருதையும் பெற்றவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றதும் ஏர்பஸ் விமானியாக சிலகாலம் பணியாற்றிய இவர், கடைசியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் ரக விமானத்தின் விமானி ஆக சேர்ந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த இந்த விபத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்துக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலைய டேபிள் டாப் ஓடுதளத்தில் முதல் முறை தரையிறக்க முயற்சித்து, அது தோல்வியில் முடிந்ததால், இரண்டாவது முறை தரையிறக்க முயற்சித்துள்ளனர் விமானிகள்.
ஆனால் தரையிறக்கும்போது விமானம் ஓடுதளத்தில் இருந்து 35 அடி தூரம் விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விமானத்தின் முன்பக்கம் நொறுங்கியதில் 17 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோழிக்கோடு: விமானம் இரண்டாக பிளந்து கோர விபத்து!’.. ‘விமானி உட்பட பலியானோர் எண்ணிக்கை’!.. முழு விபரம்!
- ‘191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விழுந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்!’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து!’
- VIDEO : "கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'!!!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘நடுராத்திரி 1 மணி’!.. துப்பாக்கி முனையில் துணிகரம்.. ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானிக்கு நடந்த கொடுமை..!
- இத மொதல்லேயே 'செக்' பண்ணிருக்கணும்... 'தப்பு' செஞ்சுட்டாங்க... 'பைலட்' பரிசோதனை முடிவால் காத்திருந்த 'அதிர்ச்சி'!
- விமானத்தில் ‘கொரோனா’ அறிகுறியுடன் இருந்த ‘பயணி’... காக்பிட் அறை ‘ஜன்னல்’ வழியாக ‘குதித்த’ விமானி... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- "போகாதீங்க ப்ளீஸ்!"... "போக வேண்டியது என் கடமை!!"... "பைலட்டின் கடைசி நிமிடங்கள்"... "என்ன நடந்தது?"...
- ‘எப்படி போய் மாட்டியிருக்கு!’.. ‘தாறுமாறாக பறந்த விமானம்’.. உயர் மின்னழுத்த கம்பிகளில் ‘சிக்கியதால்’ பரபரப்பு..
- ‘ஒரே ஒரு கப் காபியால்’.. பாதியிலேயே 326 பயணிகளுடன்.. ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்’..