கல்லூரி வெளியிட்ட 'அட்மிஷன்' பட்டியலில்,,.. 'முதலிடம்' பிடித்த 'சன்னி' லியோன்,,.. 'நக்கல்' செய்து ட்வீட் போட்ட 'சன்னி',,.. பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் இணையதளத்தில் பி.ஏ (honours) படிப்பின் சேர்க்கைக்கான முதல் தகுதி பட்டியலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தது.

கல்லூரி வெளியிட்ட 'அட்மிஷன்' பட்டியலில்,,.. 'முதலிடம்' பிடித்த 'சன்னி' லியோன்,,.. 'நக்கல்' செய்து ட்வீட் போட்ட 'சன்னி',,.. பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!!

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. விண்ணப்ப ஐடி 9513008704, ரோல் எண்- 207777-6666 மற்றும் 2020 ஆம் ஆண்டு மேற்கு வங்க மேல்நிலைக் கல்வி கவுன்சிலில் இருந்து தேர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நான்கு பாடங்களில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் ஒன்று இணையத் தளங்களில் அதிகம் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து நக்கலாக நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிறுவனம் தரப்பில், 'நடிகை சன்னி லியோனின் பெயரில் யாரோ வேண்டுமென்றே விண்ணப்பித்ததால் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இதனை சரி செய்ய நாங்கள் அட்மிஷன் துறையிடம் தெரிவித்துள்ளோம். இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவுள்ளோம்' என தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சன்னி லியோனின் பெயர் 'ABC' என மாற்றப்பட்டது. மற்ற விவரங்கள் அப்படியே இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவம் ஆன்லைன் சேர்க்கை செயல்முறை மீதான கேள்விகளையும்  எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்