கொல்கத்தாவில் ஆற்றில் மூழ்கி மேஜிக் செய்தவர் காணமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் மேன் சன்சால் லஹிரி(40) என்பவர் அப்பகுதியில் பல மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அதேபோல் நேற்று ‘ஹேரி ஹைதினி’ என்னும் மேஜிக் நிகழ்ச்சியை ஹௌரா பாலத்தில் நடத்தியுள்ளார். அப்போது மக்கள் முன் ஒரு விபரீத சாகசத்தை செய்துள்ளார்.
கொல்கத்தாவின் ஹௌரா பாலத்தின் 29 -வது தூணில் இருந்து கை, கால்களை கட்டிக்கொண்டு தலைகீழாக ஆற்றில் இறங்கியுள்ளார். இந்த மேஜிக்கின் மூலம் ஆற்றின் உள்ளே மூழ்கி கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்து வெளியே வருவார் என தெரிவித்துள்ளனர். ஆனால் ஆற்றில் இறங்கியவர் வெகுநேரமாகியும் வெளியே வராததால் உடன் இருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் 4 நீச்சல் வீரர்கள் மூலம் ஆற்றில் இறங்கி தேட ஆரம்பித்துள்ளனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வெகுநேரமாக தேடியும் மேஜிக் மேன் கிடைக்காததால் அவரை காணவில்லை என காவல் துறையினர் அறிவித்தனர். மேலும் இதுபோன்ற விபரீத மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு யார் அனுமதி அளித்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '8 வருஷ காதல்'... அதுக்காக 'நான் எந்த எல்லைக்கும் போவேன்'... இளைஞர் எடுத்த முடிவு!
- 'இனிமே இப்படித்தான்..' அப்ளிகேஷன் பார்மில் அதிரடி மாற்றம் செய்த கல்லூரி.. குவியும் பாராட்டுக்கள்!
- ‘திடீரென எழும்பி கணவரைக் கவ்வி இழுத்துச் சென்ற முதலை’.. ஆற்றில் நடந்த அவலம்!
- நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!