Kodagu : இறந்த பெண்களின் சடலங்களை குரூரமாக வீடியோ எடுத்த பிணவறை ஊழியர்... ? கர்நாடகாவில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா மருத்துவமனையில் பிணவறை ஊழியராக பணியாற்றிய ஒருவர், தமது செல்போனில், இறந்த பெண்களின் சடலங்களை நிர்வாணமாக படங்கள், வீடியோக்கள் எடுத்ததாக போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | தூக்கமே வரமாட்டேங்குதா?.. இதை ட்ரை பண்ணிப்பாருங்க.. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ட்வீட்..!

கர்நாடகா மருத்துவமனையில் பிணவறை ஊழியராக பணியாற்றி வருபவர் சையது உசேன் என்று அறியப்படுபவர். கொரோனா காலத்தில், மடிக்கேரி மாவட்ட மருத்துவமனையில் பிணவறை ஊழியராக பணிபுரிய சென்ற சையது மீது பெண்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் பிணவறையில் மேற்கண்ட விதமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, குறிப்பிட்ட பிணவறைக்கு வரும் இறந்த பெண்களின் சடலங்களை ஆடையின்றி படங்கள் மற்றும் வீடியோ எடுத்தாக சையது மீது போலீஸில் சையது மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொள்ள முற்பட்டதால் சையதுவை ஏரியா மக்கள் பிடித்து அடித்ததாகவும், அந்த சமயத்தில் அவர் தப்பியோடியதாகவும் தகவல்கள் வர, அதன் பின் அவரது செல்போனை ஆய்வு செய்தபோதுதான் இந்த விஷயங்கள் அனைத்தையும் போலீஸார் அறிந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே சையது தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, போலீஸார் அவரை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சையதுவின் தரப்பு விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | கேப்டனாக போஸ் கொடுக்க போன ஹர்திக்.. அடுத்த நொடியே வில்லியம்சன் செஞ்ச அற்புதம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!!

KARNATAKA, KODAGU, YOUTH, WOMEN, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்