எப்படி ராஜநாகம் இந்த இடத்துல வந்துச்சு...? ‘இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நடந்ததே இல்ல...’ - ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் நீளமான நச்சு ராஜ பாம்புகள், பெரும்பாலும் பாம்புகளையே உணவாக உட்கொள்கின்றன. ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன்பிறகு நீண்ட நாட்கள் உணவின்றி வாழக் கூடியவை. பொதுவாக தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ராஜநாகம் பாம்புகள் வசித்து வருகின்றன.
இவை உயரமான மலைப் பகுதிகளில் வசிப்பதில்லை. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் 2,200 மீட்டர் முதல் 2,400 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட இமயமலைத் தொடரில் ராஜ நாகத்தை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வளவு உயரமான மலைப்பகுதியில் எப்படி வசிக்கிறது என்று விஞ்ஞானிகள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 400 மீட்டர் முதல் 2.400 மீட்டர் உயரம் வரை வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் கொடிய விஷயம் கொண்ட ராஜ நாகப் பாம்பு ஒன்று மிகவும் உயரமான பகுதியில் காணப்பட்டது. இது வழக்கத்திற்கு மாறானது. இதைப் பற்றி அறிவியல் ரீதியான விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதில் உச்சபட்சமாக 2,400 மீட்டரில் கண்டறிந்தது தான் நம்ப முடியாத ஆச்சரியம். உலகிலேயே இவ்வளவு உயரமான இடத்தில் ராஜ நாகத்தை இதுவரை யாரும் கண்டதில்லை உணவுச் சங்கிலியை பின்பற்றி வந்ததன் காரணமாகவும் ராஜ நாகப் பாம்புகள் இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்திருக்கக் கூடும்.
நைனிடால் போன்ற உயரமான பகுதிகளில் அதிகப்படியான மக்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தூக்கி எறியும் குப்பைகள் எலிகளையும், பாம்புகளையும் ஈர்த்து அழைத்து வந்து விடுகின்றன என்றும் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்