"கடத்தப்பட்ட குழந்தைக்கு உறுதியான கொரோனா!".. தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட 22 பேர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் குழந்தையை கடத்திய கடத்தல்காரர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் சாலை ஓரத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குடும்பத்தினரைச் சேர்ந்தோரின் 18 வயது குழந்தை கடந்த புதன் கிழமை காணாமல் போனதை அடுத்து இதை விசாரித்த போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர். அந்த நபரோ தனக்கு குழந்தை இல்லாததால், குழந்தை ஆசையில் அந்த 18 மாதக் குழந்தைக்கு பழங்களைக் கொடுத்து கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து அந்த நபரிடம் குழந்தையை மீட்ட போலீஸார் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என்பதால், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காப்பகத்தில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதியானதை கண்டு போலீஸார் அதிர்ந்தனர். இதனால் குழந்தையின் தாய், கடத்தியவர் என குழந்தைக்கு தொடர்புடைய 22 பேர் பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தையைக் கடத்தியதன் மூலம் அந்த நபருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா!?".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா!.. என்ன நடந்தது?
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- இந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்!.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!.. தமிழகத்தில் மட்டும் 6!
- "சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா!".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'!
- 'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு!'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'!
- "அந்த நோய்க்கு ஒரு வாசனை இருந்துச்சு!.. அதே மாதிரி கொரோனாவையும் இவங்க கண்டுபிடிப்பாங்க".. அடுத்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து!
- "ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்!" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- நெகிழ வைக்கும் 'கட்டிப்புடி' வைத்தியம்...! 'கொரோனா பாதித்த தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க...' நூதன ப்ளான் பண்ணிய சிறுமி...!
- 'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு!