மாநிலத்தையே ‘உலுக்கிய’ 6 கொலைகள்... கைதான ‘சயனைடு’ கில்லர் ‘ஜோலி’ சிறையில் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 6 பேரை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள ஜோலி சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவருடைய மனைவி ஜோலி. கடந்த 2002 முதல் 2016 வரையிலான 14 ஆண்டுகளில் ஜோலியின் கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உட்பட 6 பேர் மர்மமாக உயிரிழந்தனர். அதன்பிறகு அவர்களுடைய சொத்துக்கள் ஜோலியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது.

இதையடுத்து ராய் தாமசின் அண்ணன் ரோஜோ தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் 6 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போலீசார்,  ஜோலியிடம் விசாரணை நடத்தியதில் சொத்துக்காக அவர் சயனைடு கொடுத்து அவர்களைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜோலியை கைது செய்த போலீசார் அவரை கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு சயனைடு வாங்க உதவிய உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகான விசாரணையில், மேலும் சிலரையும் கொல்ல ஜோலி திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜோலி இன்று அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறையில் ஜோலி பல்லால் கையைக் கடித்து, அறையில் இருந்த டைல்ஸின் ஓரத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

KERALA, CRIME, MURDER, SUICIDEATTEMPT, CYANIDE, KILLER, JOLLY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்